தற்கொலை 
செய்திகள்

சென்னை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி விடுதியில் மருத்துவர் தற்கொலை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்து 25 வயது மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவ மாணவர் கண்ணன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்த மருத்துவ மாணவர் கண்ணன் தற்கொலை குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் நலனின் அக்கறை செலுத்த வேண்டும். பணிச்சுமையை குறைத்து மன அழுத்தம் இல்லாமல் மருத்துவர்களை கவனிக்க வேண்டும் என மருத்துவர் ரவீந்திரநாத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT