சர்வதேச போட்டியில் அறிமுகமாகிய 2-வது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்ற விஜய் சங்கர் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரையில் நாளுக்கு நாள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியமான இலக்கு. ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிடுவதால் நெருக்கடிதான் உண்டாகும். பெரும்பாலான வீரர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடுவதில்லை என நான் நினைக்கிறேன். ஆனால், தாங்களாகவே நெருக்கடியை உண்டாக்குவதற்குப் பதிலாக நம்முடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே முக்கியமானது.