செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு நான் திரும்புவது சந்தேகம்: வெய்ன் பிராவோ சொல்கிறார்

நான் உடற்தகுதியாக இருக்கும்பொழுது அணியில் சேர்க்கப்படவில்லை. இனிமேல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவது சந்தேகம்தான் என வெயின் பிராவோ கூறியுள்ளார்.

மாலை மலர்

தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள வெயின் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட விரும்பினார். விரைவில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட விரும்பினார். அணியில் இடம் கிடைக்கும் என அதிக நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இனிமேல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்புவது சந்தேகம் என பிராவோ கூறியுள்ளார்.

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான 34 வயது வெயின் பிராவோ கூறுகையில் ‘‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து நான் நீக்கப்பட்டு இருக்கிறேன். நல்ல உடல் தகுதியுடன் இருந்த போதும் என்னை சேர்க்கவில்லை.

எனவே மீண்டும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு திரும்ப முடியும் என்று நினைக்கவில்லை. என்னால் எத்தனை ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாட முடியுமோ? அத்தனை காலம் வரை தொடர்ந்து மற்ற போட்டிகளில் விளையாடுவேன்’’ என்றார்.