செய்திகள்

உள்ளாட்சி சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது - ஐகோர்ட் உத்தரவு

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலையாக அறிவிக்காமல் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

கடந்த 2017 ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. பின்னர் அந்த கடைகளை வேறு இடங்களில் மாநில அரசு திறந்தது. 

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரித்த நீதிமன்றம், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலையாக அறிவிக்காமல் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என அரசுக்கு ஐகோர்ட் உத்தவிட்டுள்ளது. #tamilnews

SCROLL FOR NEXT