சென்னை:
வாக்காளர் பட்டியலில் இருந்து தி.மு.க. வாக்காளர்களை நீக்குவதற்கு ஆளும் கட்சி முயற்சி செய்வதாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்
அக்கட்சி புகார் அளித்துள்ளது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், தி.மு.க. சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. புகார் மனு
கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக இப்போதே ஆளும்கட்சியினர் அதிகாரிகளை
வைத்துக்கொண்டு தில்லுமுல்லுகளை செய்ய தொடங்கிவிட்டனர். கரூரில் 24, 26-ம் வார்டுகளில் தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் 200 பேர் பெயர்கள்,
பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆதாரத்தை தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்து இருக்கிறோம். இப்படிப்பட்ட முறைகேடுகளை செய்வதற்காகவே தர்மபுரியில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி மாற்றப்பட்டுள்ளார். இப்போதே பரிகாரம் காணவில்லை என்றால் தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதி அளித்தார் என்றார்.