விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தபடம். 
செய்திகள்

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று விழுப்புரம் மத்திய மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாலை மலர்

விழுப்புரம்:

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று விழுப்புரம் மத்திய மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராதாமணி, உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜெயசந்திரன், டாக்டர்.முத்தையன், மைதிலி ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், நகர அவைத்தலைவர் சர்க்கரை உள்பட ஏராளமான தி.மு.க.தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். பெண்கள் கருப்பு சேலை அணிந்திருந்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.