செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை கண்காணிப்பு கேமராவில் படம் பிடிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் தி.மு.க. மனு

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வாக்குப்பதிவை கண்காணிப்பு கேமராவில் படம் பிடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வேட்பாளர் மருதுகணேஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.

மாலை மலர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் மருது கணேஷ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த மே மாதம் இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வாரி இரைத்தார்.

இதையடுத்து இந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வருகிற 21-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்.

அதேபோல ஆளும் கட்சி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு மீண்டும் பணம், பரிசு பொருட்கள் கொடுத்து மோசடியில் ஈடுபடுவார்கள்.

மேலும் தேர்தலின்போது, வாக்குச்சாவடிகளை கைப்பற்றி, கள்ள ஓட்டு போட திட்டமிட்டுள்ளனர். எனவே ஆர்.கே.நகர் முழுவதும், அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும்.

ஓட்டுப் போடும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவேண்டும். ஓட்டுப்பதிவு முழுவதையும் படம் பிடிக்கவேண்டும். இதன் மூலம் முறைகேட்டை எளிதாக தவிர்க்கலாம், அதே நேரம், வாக்குச் சாவடிகளை கைப்பற்றும் செயலும் முறியடிக்கப்படும். எனவே, ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும், குறிப்பாக வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், தேர்தல் முறைகேடு நடப்பதை தவிர்க்கலாம். வாக்குப்பதிவை கேமரா மூலம் பதிவு செய்து நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும்’ என்று அவர் கூறியிருந்தார்.

ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் கலவரத்தில் ஈடுபடலாம். இதனால் சட்டஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், போலீஸ் பாதுகாப்பு அதிகம் போடவேண்டும். தற்போது 10 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் தேர்தல் பணிக்கு வந்துள்ளனர். இது போதாது. கூடுதலாக துணை ராணுவத்தினரை வரவழைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’.

இவ்வாறு மருது கணேஷ் மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மருதுகணேஷ் தரப்பு வக்கீல் ஆஜராகி, ‘ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும்கட்சியினர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவார்கள் என்பதால், தேர்தலின் போது வாக்குச் சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்.