காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடந்ததாக காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு விரைந்தனர். நேற்று மாலை முதல் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.