ஆ ராசா 
செய்திகள்

கோவையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை - ஆ.ராசா எம்.பி வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் இருந்து துபாய், பாங்காங் மற்றும் கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என திமுக எம்.பி ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

கோயம்புத்தூர்:

முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. எம்.பியுமான ஆ.ராசா விமான போக்குவரத்து துறை இணை மந்திரி ஹர்திப் சிங் பூரிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல்ஸ், நகைகள், வெட்கிரைண்டர், மெஷின் டூல்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து துபாய், பாங்காக் மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடி விமான சேவை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்மூலம் கோயம்புத்தூரை சுற்றியுள்ள திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களும் பயன்பெறும்

எனவும் தெரிவித்துள்ளார்.