சென்னை:
சபாநாயகர் தனபால், 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு இடக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.