அண்ணா அறிவாலயம் 
செய்திகள்

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து

அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற இருந்த தி.மு.க. எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

நடைபெறும். இதில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என கொறடா சக்கரபாணி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற இருந்த தி.மு.க. எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தலைமை செயலகத்தில் தொடங்கியது. கவர்னர் உரையை புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பௌ செய்தன.

இதைத்தொடர்ந்து, பேரவையில் உள்ள அறையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனால் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறவிருந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.