சென்னை:
சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோருக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தையே உலுக்கிய குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக கண்ணன், உதவி அதிகாரியாக பிரமோத்குமார் ஆகியோர் இருந்து வந்தனர். அவர்கள் மூலம் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் இருவருமே மாற்றப்பட்டு இருக்கின்றனர்.
எனவே குட்கா ஊழல் வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காட்டப்பட வேண்டும். இந்த தவறான போக்கு தொடரும் பட்சத்தில் சரியான நீதியை அடைய சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடரவேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #dmk #gutkhacase #cbidirector #ministervijayabaskar