திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் மு.க.ஸ்டாலின் பெண்களிடம் வாக்கு சேகரித்தார். 
செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் இருந்து வேட்பாளர் டாக்டர் சரவணனுடன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். #TNBypoll #DMK #MKstalin

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், ஓசூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த 4 தொகுதிகளிலும் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

நேற்று இரவு மதுரை வந்த அவர் ஓட்டலில் தங்கினார். இன்று காலை மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் இருந்து தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுடன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

சன்னதி தெரு, கோவில் வாசல், பெரியரதவீதி வழியாக கிரிவலப்பாதையில் நடந்தே சென்றார். அந்தப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

இன்று மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள விளாச்சேரியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். அதைத்தொடர்ந்து திருநகர், ஹார்விட்டி, அவனியாபுரம், பெருங்குடியில் பேசுகிறார்.

நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு கைத்தறி நகரில் நெசவாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மாலை 5 மணிக்கு கூத்தியார் குண்டுவில் பிரசாரத்தை தொடங்கும் அவர் தனக்கன் குளம், வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி, நாகமலை புதுக்கோட்டை, புதூர் ஆகிய பகுதிகளில் பேசுகிறார். #TNBypoll #DMK #MKstalin

SCROLL FOR NEXT