அண்ணா அறிவாலயம் 
செய்திகள்

இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு- பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைத்தது திமுக

தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அக்டோபர் 6ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.

கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள், சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்நிலையில், அக்டோபர் 6ம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.