சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த அரசு முடிவு செய்தது. இதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அடுத்த மாதம் ஆன்லைன் கலந்தாய்வு நடக்க உள்ளது.
இந்நிலையில், இம்முறை கலந்தாய்வால் கிராமப்புற மற்றும் தமிழ்வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் இதனால், ஆன்லைன் கலந்தாய்வு உடன் பழைய முறையையும் பின்பற்ற வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு அடுத்தமாதம் 4-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஐகோர்ட் பதிவாளர் தெரிவித்துள்ளார். #AnnaUniversity #DMK