பாராளுமன்றம் 
செய்திகள்

மாநிலங்களவையில் இருந்து திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் திமுக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படுகின்றன. 

இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார்.

எனினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக எம்பிக்கள், அவை நடவடிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

SCROLL FOR NEXT