உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமி சத்தம் போடவே அவரது பெற்றோர்கள் ஓடிச்சென்று சிறுமியை மீட்டனர்.படுகாயம் அடைந்த சிவக்குமாருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரெயில்வே கேட் அருகில் காலனி தெருவில் வசித்து வருபவர் சிவக்குமார் (வயது35).

இவர் ஆடுதுறை ரெயில் நிலையத்தின் வெளியே உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று அந்த சைக்கிள் ஸ்டாண்டுக்கு வந்த 11 வயது சிறுமியிடம், சிவகுமார் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சிறுமி சத்தம் போடவே சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிச்சென்று சிறுமியை மீட்டனர்.

மேலும் சிவகுமாரை தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவருக்கு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.