உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

சந்தோஷ்குமாருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. சந்தோஷ்குமாரின் மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

மாலை மலர்

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலை கருப்பராயன் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சந்தோஷ்குமார் (27). சந்தோஷ்குமாருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் அன்னூர் சாலையில் உள்ள டேங்க் மேடு பகுதியில் தனியாக குடியிருந்து வந்தார்.இதனிடையே சந்தோஷ்குமாரின் மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தோஷ் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.