உள்ளூர் செய்திகள்

சுங்குவார் சத்திரம் அருகே வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது

ஆலந்தூர் பகுதியில் உள்ள கார் கம்பெனியில் சூப்பர் வைசராக சங்கரலிங்கம் வேலை செய்து வருகிறார். மோட்டார் சைக்கிள் வந்த 2 வாலிபர்கள் திடீரென சங்கரலிங்கத்தின் செல்போனை பறித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

தென்காசி மாவட்டம் புதூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். (வயது24). இவர் சென்னை அடுத்த ஆலந்தூர் பகுதியில் உள்ள கார் கம்பெனியில் சூப்பர் வைசராக வேலை செய்து வருகிறார். அவர் பணி சம்பந்தமாக சுங்குவார் சத்திரம் அடுத்த சந்தவேலூர் அருகே சென்னை-தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த 2 வாலிபர்கள் திடீரென சங்கரலிங்கத்தின் செல்போனை பறித்தனர். அவர்களில் ஒருவனை அக்கம்பக்கத்தினர் உதவியோடு சங்கரலிங்கம் மடக்கி பிடித்து சுங்குவார் சத்திரம் போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவன் திருவெற்றியூர் வ.உ.சி. தெருவை சேர்ந்த பிரதீப் (26) என்பது தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT