கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாலை மலர்

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே பிராதுகாரன்பட்டியை சேர்ந்தவர் சிவா (31). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். நேற்று தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வைகை அணை அருகே ரெங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி (44). டிரைவர் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றார். இந்த நிலையில் வீட்டில் தவறி விழுந்த அவர் மயக்கமடைந்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வைகை அணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.