உள்ளூர் செய்திகள்

குலசேகரநல்லூரில் வாலிபர் தற்கொலை

கொம்பையா சமீப காலமாக சற்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்.கடந்த 2-ந்தேதி இரவு கொம்பையா தனது தாய் முத்தம்மாளிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டில் தனியாக படுத்து தூங்கி உள்ளார்.

மாலை மலர்

புதியம்புத்தூர்:

புதியம்புத்தூர் அருகே உள்ள குலசேகர நல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் கொம்பையா (வயது26). இவரது தந்தை வெள்ளைச் சாமி இறந்து விட்டார். தாய் முத்தம்மாள் மற்றும் சகோதர, சகோதரிகளிடம் கொம்பையா வசித்து வந்துள்ளார். சமீப காலமாக இவர் சற்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்.

கடந்த 2-ந்தேதி இரவு கொம்பையா தனது தாய் முத்தம்மாளிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டில் தனியாக படுத்து தூங்கி உள்ளார். இரவு மின் விசிறி கம்பியில் சேலையால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொம்பையா உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து ள்ளனர்.