கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

உத்தமபாளையத்தில் வாலிபர் மாயம்

வீட்டைவிட்டு வெளியே சென்ற வாலிபர் திடீரென மாயமானார்.புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் அருகில் உள்ள ராமசாமிநாயக்கன்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் சீலமுத்து(23).

இவர் சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.