கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

சிறுமலை அருகே வேன் மோதி ஒருவர் படுகாயம்

சிறுமலை 9-வது கொண்டைஊசி வளைவில் சென்றபோது எதிரே வந்த வேன் மோதி வாலிபர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மாலை மலர்

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே இடையகோட்டை கோபால்பட்டியை சேர்ந்தவர் முத்து(25). இவர் தனது நண்பர் அகஸ்தியர்புரத்தை சேர்ந்த மாரியப்பன்(44) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சிறுமலை 9-வது கொண்டைஊசி வளைவில் சென்றபோது எதிரே வந்த வேன் மோதி முத்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.