கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

குடிப்பழக்கத்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

கம்பம் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் என்ஜினீயரிங் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கம்பம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம்:

கம்பம் 31-வது வார்டு சி.எம்.எஸ் ேராடு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சிவபாலன்.

என்ஜினீயரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். மனநிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2 வருடங்களாக வீட்டிலேயே இருந்துவந்தார். இவருக்கு போதை பழக்கம் இருந்ததால் அதனை குடும்பத்தினர் கண்டித்தனர்.

இதனால் சம்பவத்தன்று தனது அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT