கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

தேனி அருகே நோய்கொடுமையால் வாலிபர் தற்கொலை

கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாலிபர் மனஉளைச்சலில் இருந்தார்.சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி:

தேனி அருகில் உள்ள சாலிமரத்துப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் முத்துராஜ்(34).

இவருக்கு கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துராஜ் பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.