தேனி:
தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் மகள் காவியா(21). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடைக்கு சென்ற காவியா திடீரென மாயமானார்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.