திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் 17வது வார்டுக்கு சுயேட்சை வேட்பாளராக தொழிலதிபர் ரத்தினத்தின் மகன் வெங்கடேஷ் போட்டியிட்டார்.
மாநகராட்சியில் 22 வயதான இளம் வேட்பாளரான இவருக்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்துவந்தனர்.
இந்த வார்டில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அனைத்து வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவிய நிலையில் இந்த வார்டில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இந்த பகுதி மக்கள் மட்டுமின்றி மாநகராட்சி முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் வெங்கடேஷ் 1591 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.