கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

போடியில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

சம்பவத்தன்று மொபட்டில் தனது குழந்தைகளுடன் வெளியே சென்ற இளம்பெண் மாயமானார்.புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த கார்த்திக் மனைவி ரோகினி(24).

இவர்களுக்கு தரணிஸ்(6), கிரிசினியா(4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மொபட்டில் தனது குழந்தைகளுடன் வெளியே சென்ற ரோகினி மாயமானார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரோகினியின் தாய் பஞ்சவர்ணம் போடி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.