பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம்த்தில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் சக்கரப்பட்டி சித்தா் ஜீவசமாதி ஆலயத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு சிறப்பு யாகவேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சக்கரப்பட்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு சக்கரப்பட்டி சித்தரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சக்கரப்பட்டி சித்தர் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.