அமிர்தகடேஸ்வரர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். 
உள்ளூர் செய்திகள்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு

தொடர்ந்து கோபூஜை, கஜ பூஜை, அஸ்வதை பூஜை செய்து வழிபட்டார்.விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம்.

தரங்கம்பாடி:

தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுஷ் ஹோமம், மணிவிழா, யாக பூஜைகள் நடைபெறுகின்றன.

இக்கோவிலில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோபூஜை, கஜ பூஜை, அஸ்வதை பூஜை செய்து வழிபட்டார்.

பின்னர் விநாயகர், அமிர்தக டேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இதில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த.

விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், வார்டு உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.