உள்ளூர் செய்திகள்

உலக புத்தக தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது.புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கமாகத் தி.மு.க.வினர் முன்னெடுக்கிறோம்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக புத்தக தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது. நாம் அறியாத உலகத்தைக் காட்டுகிறது. அறிவூட்டுகிறது! நம்மை பண்படுத்துகிறது!

அதனால்தான், புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கமாகத் தி.மு.க.வினர் முன்னெடுக்கிறோம்.

புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், நமது திராவிட மாடல் அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், நூலகங்களுக்கும் புத்துயிர் அளித்துள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT