பள்ளி மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்ற காட்சி. 
உள்ளூர் செய்திகள்

உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மல்லுப்பட்டி கிராமத்தில் பள்ளி வளாகத்தில் இருந்து முக்கிய வீதி வழியாக உலகப் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இப்பேரணியை பாலக்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிந்து பேரணியை தொடங்கி வைத்தார்.

மாலை மலர்

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மல்லுப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மல்லுப்பட்டி கிராமத்தில் பள்ளி வளாகத்தில் இருந்து முக்கிய வீதி வழியாக உலகப் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை பாலக்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிந்து பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணியில் புகை பிடித்தால் புற்றுநோய் உண்டாகும் குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு புகைத்தால் உங்களையும் எங்களையும் நேசிப்பவர்களையும் பாதிக்கும் குடிபோதையில் குடும்ப சந்தோஷத்தை இழப்பீர்கள்.

போதை நம் காசு கொடுத்து வாங்கும் வேதனை இறுதியில் மரணம். போதையை ஒழிப்போம் பாதையை வளர்ப்போம் போதையில் மோதி பாதை மாறாதே உயிரை அளிக்கும் உடலை உறிஞ்சும் கொடிய எதிரி போதை என்று பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தடைந்தனர்

விழிப்புணர்வு பேரணிக்கு மகேந்திர மங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.