உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே தொழிலாளர்கள் சாலை மறியல்

50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வரும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு சரியான முறையில் வேலை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT