பாண்டி 
உள்ளூர் செய்திகள்

தேவதானப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி

உயர்மின் அழுத்த வயரில் உரசியதில மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.போலீசார் இது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி மேட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி என்ற சிங்காரவேலன் (வயது 42). கட்டிட கூலி தொழிலாளி யான இவர் ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேற்கூரை பகுதியில் உயர் மின் அழுத்த வயர் செல்வதை கவனிக்காமல் கீழே இருந்த கம்பியை மேல் நோக்கி தூக்கினார்.

அப்போது உயர்மின் அழுத்த வயரில் பட்டு மின்சாரம் தாக்கி வீசப்ப ட்டார். சக தொழிலாளர்கள் மீட்டு அருகில் உள்ள தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டார் எனக்கூறினர். பிரேத பரிசோதனைக்காக தேனி க. விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் அவரது உடல் கொண்டு செல்ல ப்பட்டது.

தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு ள்ளனர். மின்சாரம் தாக்கி இறந்த பாண்டிக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.