வேடசந்தூர்:
வேடசந்தூர் சந்தைபேட்டையை சேர்ந்தவர் நடேசன்(40). இவர் மில்லில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், அன்பினியன், பாரினியன் என 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நடேசன் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றார்.
உறவினர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடேசன் உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.