உள்ளூர் செய்திகள்

வி.கே.புரத்தில் தொழிலாளி தற்கொலை

குடும்ப பிரச்சினை காரணமாக செந்தில் குமார் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.விஷம் குடித்த அவரை உறவினர்கள் மீட்டு அம்பை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மாலை மலர்

நெல்லை:

அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே உள்ள கீழ கொட்டாரத்தை சேர்ந்தவர் செந்தில் குமார்(வயது 49). தொழிலாளி.

குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி ராஜம்மாள்(45) இவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட செந்தில்குமார் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு அம்பை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுதொடர்பாக வி.கே.புரம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.