நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கல்லூலி திருவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவி சுமதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த செல்வகுமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.