வள்ளியூர்:
வள்ளியூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 43). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 13-ந்தேதி இரவு இவர் தனது வீட்டு முன்பு காரை விட்டுவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவரது கார் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடாக காட்சி யளித்தது. இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் வள்ளியூர் எஸ்.கே.பி. நகரை சேர்ந்த தொழிலாளியான முருகன்(50) என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அதன்பின்னரே காருக்கு தீ வைத்ததற்கான விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.