மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணிக்காக மரக்கன்றுகள் நடப்பட்டது. 
உள்ளூர் செய்திகள்

வத்தலக்குண்டு அருகே மூலிகை தோட்டம் அமைக்கும் பணி

வத்தலக்குண்டு அருகே தனியார் அறக்கட்டளை சார்பில் மூலிகை தோட்டம் அமைக்கும் பணி தொடங்கியது

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ஜி.தும்மலபட்டி ஊராட்சியில் பசுமை வதிலை அறக்கட்டளை சார்பில் மூலிகைத்தோட்டம் அமைக்கும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா நடராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார்.

பின்னர் திருச்சி அரசு மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவிகளுக்கு பசுமை வதிலை கட்டளை தலைவர் மருதராஜன் மூலிகை தோட்டம் எப்படி அமைப்பது என்று விளக்கிக் கூறி பயிற்சி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கவியரசு, சங்கரீஸ்வரி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பண்ணைகோமகன், துணைத்தலைவர் தங்கராஜ், அறங்காவலர் ராஜாமுகமது, நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வனராஜா, சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் செல்வபாண்டி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT