உள்ளூர் செய்திகள்

டான் பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா- மேயர், எம்.எல்.ஏ. பங்கேற்பு

குழு நடனம், விழிப்புணர்வு பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் மற்றும் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னை:

சென்னை பேசின் பிரிட்ஜ் டான் பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் குழு நடனம், விழிப்புணர்வு பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

அருட்தந்தை அல்போன்ஸ் வரவேற்புரையாற்றி வாழத்துரை வழங்கினார். சென்னை மாநராட்சி மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் ஷீலு பிரான்சிஸ், மாமன்ற உறுப்பினர் சரவணன், டான் பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் லீமா ரோஸ், டாக்டர் தமிழரசி சிவகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT