உள்ளூர் செய்திகள்

புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை

மேச்சேரி அருகே திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சேலம்:

சேலம் மாவட்டம் மேச்சேரி காளிகவுண்டனூரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 28). இவருக்கும், தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகள் சந்தியா (28) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் காளிகவுண்ட னூரில் வசித்து வந்தனர்.

கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மனம் உடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT