உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் இருந்து ஆந்திராவுக்கு அரசு பஸ்சில் ரேசன் அரிசி கடத்திய 2 பெண்கள் கைது

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 12 மூட்டைகளில் ரேசன் அரசி கடத்தப்படுவது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

Suresh K Jangir

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த பஸ்சை காஞ்சிபுரம் பேட்டையில் நிறுத்தி திடீர் சோதனை செய்தனர். அப்போது அதில் 12 மூட்டைகளில் ரேசன் அரசி கடத்தப்படுவது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

இந்த ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக பஸ்சில் இருந்த ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த தீபா, கன்னியம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.