பலியான பெருமாளம்மாள். 
உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி

வேடசந்தூரில் வாகனம் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே சுக்காம்பட்டி அருகம்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன், விவசாயி. இவருடைய மனைவி பெருமாளம்மாள் (வயது 42).

இவர்கள் மோட்டார் சைக்கிளில் கெண்டையக்கவுண்டனூர் நால்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

பெருமாளம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். மணிகண்டன் பலத்த காயத்துடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், ஏட்டு பார்த்தசாரதி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT