கடலூர்:
கடலூர் கே.கே. நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46). இவரது மனைவி மீனாட்சி. இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த எலி மருந்தை மீனாட்சி திடீரென்று சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனை தொடர்ந்து மீனாட்சியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மீனாட்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.