பெரம்பூர்:
சென்னை ஓட்டேரி நியூ பேரான்ஸ் ரோட்டில் வசித்து வருபவர் அப்துல் ஹஜிஸ். இவரது மனைவி ஷமீம் (39). வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கணவருக்கு தெரியாமல் ஷமீம் பழைய வாழைமாநகர் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி அதில் ரூ.20 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார்.
மீதி பணத்தை அருண் கேட்டு வந்த நிலையில் அவர் கொடுக்காமல் இருந்து வந்ததால் கணவரிடம் சொல்லி விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்த ஷமீம் நேற்று வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயத்துடன் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.