உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் வன உயிரின வார விழா

மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வனஉயிரின வாரவிழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வனச்சரக செல்வராஜ், ராம்பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்றனர்.

கோத்தகிரி முக்கிய சாலைகள் வழியாக பேரணி எடுத்துச் சென்று கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

கோத்தகிரி லாங்வுட் சோலை பாதுகாப்போம் குழு கோத்தகிரி வனச்சராகம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் கோத்தகிரி அருகில் உள்ள பெண்கள் மேல் நிலையில் பள்ளியில் நடைபெற்றது

இதில் லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே ஜே ராஜு கலந்து கொண்டு காடுகள் மற்றும் வன விலங்குகள் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தரங்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது