புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் 
உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது- கல்வி அமைச்சர் தகவல்

பள்ளிகள் கொரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மாலை மலர்

புதுச்சேரியில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள், கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

கொரோனா 3வது அலை தாக்கத்தால் அந்த வகுப்புகள் நடைபெறவில்லை.  இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் நாளை

(திங்கட்கிழமை) முதல் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் செயல்படும் என்று புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும்,  பள்ளிகளில் முறையான ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 148 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி உள்ளார்.