உள்ளூர் செய்திகள்

நாங்குநேரியில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

விழாவில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மாலை மலர்

நெல்லை:

நாங்குநேரியில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க. கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் நாங்குநேரி நகர செயலாளர் சங்கர் முத்துடையார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.