உள்ளூர் செய்திகள்

ஆட்டோ மோதி நெசவு தொழிலாளி பலி

சென்னி–மலையில் உள்ள காங்கேயம் ரோட்டில் மலை கணுவாய் பகுதியில் இவர் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னிமலை:

சென்னிமலை அரச்சலூர் ரோட்டில் அம்மாபாளையம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (58). நெசவுத் தொழிலாளி. இவர் காங்கேயம் அருகில் உள்ள பாப்பினியில் பொங்கல் விழாவிற்கு சென்று விட்டு சென்னிமலைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சென்னி–மலையில் உள்ள காங்கேயம் ரோட்டில் மலை கணுவாய் பகுதியில் இவர் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது திடீரென மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த மூர்த்திக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.