வி.கே.புரம் உதவி செயற்பொறியாளர் ராமகிளி, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

வி.கே.புரம் நகர் பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் நீர்-மோர் பந்தல்

விக்கிரமசிங்கபுரம் நகர் பிரிவு அலுவலகத்தில் விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டது.மின் நுகர்வோர்களுக்காக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் நகர் பிரிவு அலுவல கத்தில் மின் நுகர்வோர்கள் பயன் பெறும் வகையில் மின்சார பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டது. மேலும் அலுவலகத்திற்கு வரும் மின் நுகர்வோர்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கூறியதால், மின் நுகர்வோர்களின் தாகத்தை தணிக்கும் பொருட்டு பிரிவு அலுவலக வளாகத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

அதில் வி.கே.புரம் உதவி செயற்பொறியாளர் ராமகிளி, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். மேலும் மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் பாதுகாப்பு வாசகங்களுடன் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி மின் பொறியாளர் ஆக்னஸ்சாந்தி மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகர் பிரிவு பணியாளர்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT